skip to main |
skip to sidebar
தால் ரொட்டி
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு -100 கிராம்
- கோதுமை மாவு - கால் கிலோ
- சிறிய கேரட் - துருவியது
- மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
- மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
- வெங்காயம் - 1
- இஞ்சி,பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - 2டீஸ்பூன்
செய்முறை
- குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக கட் செய்த வெங்காயம் சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சல்,மிளகாய் பொடி,கேரட் துருவியது சேர்த்து நன்கு வதக்கி பாசிப்பருப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நிதானமாக 2 விசில் விட்டு எடுக்கவும்.நன்கு வெந்த பின்பு மசித்துக் கொள்ளவும்.
- பின்பு அதனோடு உப்பு, கோதுமை மாவை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணிர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரமாவது வைக்கவும்.
- அதனை தேவையான அளவிற்கு உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் மாவு போட்டு பரத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.விருப்பப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் விட்டும் சுடலாம்.
- சுவையான தால் ரொட்டி ரெடி.இதனை துண்டு போட்டு அப்படியேயும் சாப்பிடலாம்.அல்லது ரைத்தா உடன் சாப்பிடலாம்.