மீன் தொக்கு

தேவையான பொருட்கள்

  • 1. மீன் - 1/2 கிலோ (ஃபில்லெட்ஸ் துண்டுகள்)
  • 2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • 3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • 4. மிளகாய் வற்றல் - 2
  • 5. பச்சை மிளகாய் - 2
  • 6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  • 7. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • 8. மிளகு தூள் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • 9. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 10. தனியா தூள் - 3 தேக்கரண்டி
  • 11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  • 13. கருவேப்பிலை, கொத்தமல்லி
  • 14. உப்பு

செய்முறை

  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து உடைய வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
  • தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.
  • நன்றாக மீன் வெந்து, நல்லா மசாலா கெட்டி ஆனதும் இறக்கிவிடவும்.

மொறு மொறு வாளை மீன் வறுவல்.

தேவையான பொருட்கள்

  • வாளை மீன் - அரை கிலோ
  • எண்ணை - 100 மில்லி
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
  • பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
  • கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
  • கடலை மாவு - 1டீஸ்பூன்
  • அரிசி மாவு - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
  • உப்பு - தேவைக்கு.
  • ரெட் கலர் - 1 பின்ச்

செய்முறை

  • மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
  • பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
  • அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணையில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
  • ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு:

வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

கிராமத்து கறி குழம்பு

தேவையான பொருட்கள்

  • 1. ஆட்டுகறி - 3/4 கிலோ
  • 2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
  • 4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 6. மிளகாய் வற்றல் - 10
  • 7. தனியா - 1 மேஜைக்கரண்டி
  • 8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • 9. பட்டை, லவங்கம்
  • 10. கசகசா - 1 தேக்கரண்டி
  • 11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
  • 12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
  • 13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 14. உப்பு
  • 15. பூண்டு - 5 பல்
  • 16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை

  • கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும்.
  • கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
  • இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  • இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
  • இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
  • கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.




ஆட்டுக்கல்ச்சுப்

வேக வைக்க
****************
கால் - நாலு துண்டு
தக்காளி - - அரை பழம்
வெங்காயம் - ஒன்று
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு சிறிது
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை -சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் பவுடர் - ஒரு தேக்கரண்டி

தாளிக்க
***********

கரம் மசாலா துள் - ஒரு பின்ச்
நெய் - ஒரு தேக்கரண்டி

குக்கரில் காலை நன்கு தேய்ட்து கழுவி அதில் வேகவைக்க கொடுத்துள்ள மசாலாக்களை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
குக்கரில் விசில் வரும் போது தீயை குறைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் தேங்காய் பவுடரை கரைத்து ஊற்றி கொதிக்க விடு .
கொதித்து இரக்கியதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்

.

குறிப்பு
**********
சின்ன குழந்தைகளாக இருந்தால் அதை வடித்து தாளிக்கவும்.
பெரிய குழந்தைகள், கர்பிணி பெண்கள், பிள்ளை பெற்றவர்கலுக்கு என்றால் அப்படியே வெந்த்ததில் தாளித்து சேர்க்கலாம்

ஆட்டு கால் குழதைகள் எழுந்து நிற்கும் போது ஆட்டு எலும்பு, அல்லது காலில் சுப் போட்டு கொடுத்தால் நன்கு வலுவடையும்.
பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது, மூட்டு வலி உள்ளவர்களும் இதை குடிக்கலாம்.

vadai

சில்லி பன்னீர்

samayal samayal,samayal &TIPS

oracle software, .net

1

'Tamilish'

கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி

தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு -- 2 கப்
காலிப்ளவர் -- 1/2 கப் (துருவியது)
கொத்தமல்லி தழை -- 1/4 கப் (பொடிதாக நறுக்கியது)
புதினா தழை -- 15 இலைகள் (பொடிதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -- 1/4 டீஸ்பூன்
உப்பு -- தே.அ
செய்முறை;
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி ஊறவைக்கவும்.
வாணலியில் காலிப்ளவரை போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் உப்பு, மஞ்சள்தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலையை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
கொஞ்சம் ஆறியதும் சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு அதில் இந்த காலிப்ளவர் கலவையை வைத்து நன்கு மூடி நன்கு தேய்க்கவும்.
பின் தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டு நெய்/எண்ணைய் விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
ரெடி.

சிம்பிள் சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள்;
மைதா - 1 கப் (200 கிராம்),
பெரிய வெங்காயம் - 1,
குட மிளகாய் - 1,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி,
சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை;
வெங்காயம், குட மிளகாயை சது துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.
மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ரொம்ப மெலிதாகவோ, மொத்தமாகவோ இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.
சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.
சுலபமான, சுவையான சில்லி பரோட்டா ரெடி.

சிக்கன் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்;
1. பன் - 1 (லாங் பன் / சின்ன பன்)
2. மயோனிஸ் - 2 தேக்கரண்டி
3. டொமேடோ கெட்சப் - 1 தேக்கரண்டி
4. தக்காளி - 1/2 (விதை நீக்கியது)
5. ஸ்பினாச் (அ) சாலட் கீரை - 2 இலை
6. சமைத்த சிக்கன் துண்டு - 1/2 கப் (உங்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து வைக்கவும்)
செய்முறை;
பன்'ஐ இரண்டாக நீலமாக வெட்டி வைக்கவும்.
சிக்கன் சிரிதாக நறுக்கி வைக்கவும்.
கீரை, தக்காளி நறுக்கவும்.
ஒரு பாதியில் மயோனிஸ் தடவவும்.
மறு பாதியில் டொமேடோ கெட்சப் தடவவும்.
அதன் மேல் ஒரு வரிசை தக்காளி துண்டுகள் வைத்து, அதன் மேல் சிக்கன் துண்டுகள் வைத்து, அதன் மேல் கீரை வைத்து மற்றொரு பாதி பன்'ஆல் மூடி சாண்ட்விச் மேக்கரில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சில்லி சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்:
Chilly chicken fry
கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை:

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

சிக்கன் டிக்கா

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - கால் கிலோ.
தயிர் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ஏலக்காய் - 3
மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு
கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிது

செய்முறை:

கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும்.

தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையினை கோழித்துண்டுகள் மீது பூசி 4 மணி நேரம் நன்கு ஊற விடவும்.

இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து 350 டிகிரி சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும் (தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது). 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.

பின்னர் எடுத்து பரிமாறவும். தேவையானால் அதன் மீது கொத்தமல்லி, தக்காளி சாஸ், வெள்ளரிக்காய், கேரட் தூவிக் கொள்ளலாம்.