தேவையான பொருட்கள்
- 1. கோதுமை மாவு - 2 கப்
- 2. பாதாம் - 10
- 3. முந்திரி - 20
- 4. நெய்
- 5. உப்பு
செய்முறை
- பாதாம் நீரில் போட்டு ஊறவைத்து தோல் நீக்கவும்.
- பாதாம் முந்திரியை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
- இதை மாவு, உப்புடன் கலந்து நீர் சேர்த்து தேவைக்கு நெய் விட்டு சப்பாத்தி மாவாக பிசையவும்.
- இதை சப்பாத்தியாக தேய்த்து, மேலே சிறிது நெய் தடவி, மாவு தூவி 4 ஆக மடித்து மீண்டும் தேய்த்து மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
- இதை நெய் விட்டு தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.
இது ருசியானது, சத்தானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.