skip to main |
skip to sidebar
பட்டூரா
தேவையான பொருட்கள்
- மைதா- இரண்டு கோப்பை
- தயிர்-அரைக் கோப்பை
- தண்ணீர்- அரைக்கோப்பை
- பேக்கிங் பவுடர்-ஒரு தேக்கரண்டி
- ஆப்பச் சோடா- ஒரு சிட்டிக்கை
- எண்ணெய்- இரண்டு தேக்கரண்டி
- உப்பு- ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- மைதாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,மற்றும் சோடாவைப் போட்டு ஜல்லடையில் ஜலித்து கொள்ளவும்.
- பிறகு அதில் தயிரையும் எண்ணெயையும் ஊற்றி பிசறிய பின் தண்ணீரை சிறுது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின்பு மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சையளவு பத்து அல்லது பன்னிரெண்டு உருண்டைகளாக உருட்டவும்.
- பின்பு உருட்டிய உருண்டைகளை சற்று அடர்த்தியான அகன்ற பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- இந்த சுவையான பட்டூராவை சூடாக,சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.