சிம்பிள் சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள்;
மைதா - 1 கப் (200 கிராம்),
பெரிய வெங்காயம் - 1,
குட மிளகாய் - 1,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி,
சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை;
வெங்காயம், குட மிளகாயை சது துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.
மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ரொம்ப மெலிதாகவோ, மொத்தமாகவோ இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.
சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.
சுலபமான, சுவையான சில்லி பரோட்டா ரெடி.